சூரி, சசிகுமார் மற்றும் உன்னிமுகுந்தன் கூட்டணியில் புதிய படம்

சூரி, சசிகுமார் மற்றும் உன்னிமுகுந்தன் கூட்டணியில் புதிய படம்

சூரி, சசிகுமார் மற்றும் உன்னிமுகுந்தன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை கும்ககோணத்தில் நடைபெற்றது. 

விடுதலை 2-ம் பாகத்தில் நடித்து வரும் சூரி புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கும் இத்திரைப்படத்தில், சூரியுடன் இணைந்து சசிகுமார் மற்றும் மலையாள பிரபலம் உன்னி முகுந்தனும் நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக நடிகைகள் ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடிக்கிறார்கள். மேலும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுதியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். துரை செந்தில்குமார் - வெற்றிமாறன் - சூரி - சசிகுமார் - உன்னி முகுந்தன் ஆகியோர் கூட்டணியில் உருவாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. 

Share this story