ரூ.40 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகும் சூரி படம்
1697287352864

சூரி கதாநாயகனாக நடித்து வெளியான விடுதலை படத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது, துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'கருடன்' என்ற முழு நீள ஆக்ஷன் அதிரடி படத்தில் சூரி நடித்து வருகிறார். இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார். இதன் படப்பிடிப்பு கும்பகோணம், தேனி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் சசிகுமார், சமுத்திரக்கனி, உன்னி முகுந்தன், ரேவதி ஷர்மா உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், கருடன் படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது அதன்படி, இந்த படம் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. பெரிய பட்ஜெட்டில் சூரி படம் நடிப்பது இதுவே முதல் முறையாகும்.