அடுத்த ரவுண்டுக்கு தயாரா? - “சூது கவ்வும் 2” ஆனால் விஜய் சேதுபதிக்கு பதில் இந்த நடிகர்.

photo

விஜய் சேதுபதி தாஸ்ஸாக ஐந்து விதிமுறைகளை வைத்துக் கொண்டு, அதிக சேதாரமில்லாமல் ஆட்களை கடத்தி செய்கூலி வாங்கும் ஒரு அமெச்சூர் கிட்நாப்பராக நடித்து அசத்தியிருப்பார். கதாபாத்திரங்கள் சீரியஸாக தங்கள் வேலையை செய்தாலும், பார்க்கும் நமக்கு சிரிப்புதான் வரும். நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

photo

அதாவது, சூதுகவ்வும் பாகம் இரண்டை தயாரிக்க சி.வி சண்முகம் முடிவு செய்துள்ளாராம். இந்த படத்தை எம். எஸ் அர்ஜுன் இயக்க உள்ளார்.  இந்த படத்தில் கதாநாயகனாக விஜய்சேதுபதிக்கு பதில் மிர்ச்சி சிவா நடிக்க உள்ளாராம். இவருடன் இணைந்து சத்தியராஜ், கருணாகரன், ராதாரவி, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். படப்பிடிப்பு ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்க உள்ளனர்.  இந்த படத்தில் விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

photo

இந்த படத்தை இயக்க போகும் எம். எஸ் அர்ஜுனின் முதல் படமான ‘யங் மங் சங்’ திரைப்படம் இன்னும் வெளியாவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story