என்னுடைய பலமே இயக்குனர்கள் - வெற்றி ரகசியத்தை உடைத்த நடிகை ஐ​ஸ்வர்யா ராஜேஷ் !

aishwaryarajesh

இயக்குனர்கள் என்னுடைய பலமே என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

 ‘லாக்கப்’ படத்தின் இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட பின்னர் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், கதையின் நாயகியாக ஒவ்வொரு படத்திலும் நடிப்பதற்கு என்னுடைய பலமே இருப்பது இயக்குனர்கள் தான். 

aishwaryarajesh

ஒரு படத்தில் நடிகர், நடிகைகளை பிரம்மாண்டமாகவும், பிரமிப்பாகவும் காட்சிப்படுத்த இயக்குனர்களால் மட்டுமே முடியும். முதலில் இந்த படத்தில் என்னை நாயகியாக வைத்து இயக்க இயக்குனர் சார்லஸ் மறுத்துவிட்டார். அதன்பிறகு பொறுமையாக அழைத்து பேசி படத்தை இயக்க வைத்தேன். ஒரு நடிகர் நட்சத்திரமாக, சூப்பர் ஸ்டாராக மாறுவது இயக்குனர் கையில் உள்ளது. 

aishwaryarajesh

சொப்பன சுந்தரி படத்தில் முற்றிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். கண்ணீர் விட வைப்பது என்பது எளிதான விஷயம். ஆனால் வாழ்க்கையில் மிகவும் கடினமான வேலை மற்றவர்களை சிரிக்க வைப்பது தான். ரசிகர்களை சிரிக்க வைப்பது சாதாரண விஷயமல்ல. இதை சரியாக செய்துவிட்டால், அவர்களை விட சிறந்த நடிகை வேறும் யாரும் இருக்கமுடியாது என்று கூறினார். 







 

Share this story