கட்டபொம்மன் பெயரால் சொர்க்கவாசல் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்

sorgavasal

சொர்க்கவாசல் படத்தில் கட்டபொம்மன் பெயரை இழிவு படுத்தும் விதமாக வரும் காட்சிகளை நீக்க கோரி நாயுடு சமுதாயத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்த சொர்க்கவாசல் திரைப்படத்தில் கருணாஸ் கதாபாத்திரத்திற்கு கட்டபொம்மன் பெயரை வைத்து சுதந்திரப் போராட்ட வீரர் கட்டபொம்மனை இழிவு படுத்தும் விதமாக அமைக்கப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என திருப்பரங்குன்றத்தில் நாயுடு சமுதாயத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திரைப்படத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் கட்டபொம்மனை இழிவுபடுத்தும்  காட்சியை நீக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.


மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாயுடு - நாயக்கர் இளைஞர் அமைப்பின் மாநிலத் தலைவர் பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாயுடு நாயக்கர் இளைஞர்  அமைப்பு மாநில தலைவர் பாரத் தலைமையில் சொர்க்கவாசல் திரைப்படத்தில் கட்டபொம்மன் பெயரில் வரும் காட்சிகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாயுடு - நாயக்கர் இளைஞர் சங்க மாநில தலைவர் பாரத் கூறுகையில்

kattabomman

கடந்த நவம்பர் 29 ஆம் தேதி ஆர் ஜே பாலாஜி நடித்த வெளிவந்த சொர்க்கவாசல் திரைப்படத்தில் நடிகர் கருணாசின் கதாபாத்திரத்திற்கு கட்டபொம்மன் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் சொர்க்கவாசல் திரைப்படத்தில் கட்டபொம்மன் என்ற பெயரில் கருணாஸ் நடிக்கும் கதாபாத்திரத்தில் சிறையில் மதுபானம் சப்ளை செய்வதாகும். திரு நங்கையிடம் தவறாக நடந்து கொள்ளும் காட்சிகளிலும் கட்டபொம்மன் பெயரை பயன்படுத்துவதால் சுதந்திரப் போராட்ட வீரர்  வீரபாண்டிய கட்டபொம்மனின் பெயரை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்ட காட்சிகள் தங்களது சமுதாய மக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

 எனவே கட்டபொம்மன் கதாபாத்திரத்தில் வரும் காட்சிகளை நீக்க வேண்டும் அல்லது சொர்க்கவாசல் திரைப்படத்தை திரையரங்குகளிலும் ஓடிடி தளத்திலும் வெளியாவதை தடுத்து நிறுத்த வேண்டும் என வேண்டுகோள்  விடுத்துள்ளனர். மேலும் இது சம்பந்தமாக திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட காட்சிகளை சினிமா நிறுவனம் நீக்காவிட்டால் தமிழகம் முழுவதும் நாயுடு சமுதாயத்தினர் மிகப்பெரிய போராட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என தெரிவித்தார்.


மேலும் சொர்க்க வாசல் திரைப்படம் தொடர்பாக முதல்வரின் செயலாளர் தலைமைச் செயலாளர் ,தமிழக காவல்துறை தலைவர் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Share this story