‘சாரி..!!’ ‘தக் லைஃப்’ தோல்விக்கு இதுதான் காரணம்.. மனம்திறந்த மணிரத்னம்..

 இயக்குனர் மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு!

"நாயகன் போன்ற படத்தை எடுக்க வேண்டும் என்பது அல்ல; அத்தகைய படத்தை எதிர்பார்த்த ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.   

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான  படம் 'தக் லைப்'.  இந்த படத்தில் சிலம்பரசன், திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், அலி பசல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் ஆக்ஷன் டிராமாவாக உருவான  இப்படம் கமல்ஹாசனின் 234வது படமாகும். இதனை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது.  38 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் மீண்டும் இணைந்திருப்பதாலும், இந்தக்கூட்டணியில் சிம்புவும் இணைந்திருப்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு வேற லெவலில் எகிறியிருந்தது. அதேபோல் படத்தின்   டிரெய்லர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.   

கர்நாடாகவில் தக் லைஃப் படத்தை வெளியிட தடை

ஒருபக்கம் மணிரத்னம் ரசிகர்கள், மறுபக்கம் கமல் ரசிகர்கள், இன்னொரு பக்கம் சிம்பு ரசிகர்கள் படத்தைக் கொண்டாடக் காத்திருந்தனர்.  ரசிகர்களின்  எதிர்பார்ப்பை உணர்ந்து தமிழகத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.  ‘தக் லைஃப்’ படம் கர்நாடகாவைத் தவிர உலகம் முழுவதும் கடந்த ஜூன் 5ம் தேதி வெளியானது.   ஆனால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப்படம், ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை.  மணிரத்னம் படத்தில் ஏற்கனவே பலமுறை பேசப்பட்ட கேங்ஸ்டர் கதைக்களம் என்பதாலும், கேரக்டர்களின் வடிவமைப்பு தெளிவாக இல்லாததாலும் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. 

பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மணிரத்னம் கையெழுத்திட்டாரா? உண்மையை உடைத்த சுஹாசினி 

அத்துடன் த்ரிஷாவின் கதாப்பாத்திரம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.  படத்தின் காட்சிகளையும்,  திரிஷாவின் கேரக்டரையும் நெட்டிசன்கள் ட்ரோல் மெட்டீரியலாக மாற்றி விமர்சிக்கத்தொடங்கினர். முன்னதாக மிகப்பெரிய ஹிட் அடித்த முத்த மழை பாடல் கூட படத்தின் காட்சிகளோடு ஒத்துபோகவில்லை என ரசிகர்கள் ஏமாற்றத்துடன் தெரிவித்தனர்.  இந்த நிலையில், தக் லைஃப் தோல்வி குறித்து முதன்முறையாக இயக்குநர் மனம் திறந்து பேசியுள்ளார்.  

அவர் கூறியதாவது, “கமல் மற்றும் என்னிடம் இன்னொரு நாயகன் படத்தை எதிர்பார்த்த ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.  நாங்கள் பின்னோக்கி செல்ல விரும்பவில்லை. நாயகனை விட வேறுபட்ட ஒரு கதையை, ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தான் கொடுக்க நினைத்தோம். நாங்கள் எடுத்த படத்திற்கு முற்றிலும் வேறுபட்ட படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.  இதுதான் பிரச்சனை.” என்று தெரிவித்துள்ளார்.  

Share this story