மாறி மாறி பதிலடி கொடுத்த சவுண்ட் சௌந்தர்யா.. முத்துக்குமரன், சுனிதா கப்சிப்..!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு நாள் எபிசோடையும் அன்றைய தினம் வரும் ப்ரோமோ வீடியோக்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சற்று முன் வெளியான இன்னொரு ப்ரோமோ வீடியோவில் சௌந்தர்யா அதிரடியாக தன் மீது வைக்கப்படும் புகார்களுக்கு பதிலடி கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் நடந்து வரும் நிலையில், மேனேஜர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வீசப்படுகின்றன. இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு சௌந்தர்யா பதிலடி கொடுத்தார்.
கிரியேட்டிவிட்டி இல்லை" என்று முத்துக்குமரன் புகார் அளித்த நிலையில், "இது உங்களுடைய டாடியோட ஹோட்டல் தான். நீங்களே கிரியேட்டிவிட்டி இல்லை என்று சொன்னால் எப்படி?" என்று சௌந்தர்யா கேட்கிறார். அதற்கு முத்துக்குமரன், "இது என்னுடைய பிரச்சனை இல்லை" என்று கூற, "அப்போ உங்க டாடி காட்டின ஹோட்டல் அப்படித்தானா?" என்று கூறினார்.உங்களை பல இடங்களில் பார்க்க முடியவில்லை" என்ற குற்றச்சாட்டை கூற, அதற்கு சௌந்தர்யா, "எல்லா இடத்திலும் நானே இருக்க வேண்டுமென்றால் நான் ஆவியாக தான் இருக்க வேண்டும்" என்று
null#Day18 #Promo2 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 24, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/txgQPSiWs7
திலடி கொடுக்கிறார். இதை கேட்டு போட்டியாளர்கள் சிரிக்கின்றனர். சில நேரங்களில் "பர்சனல் டார்கெட் பண்றீங்க என்று சுனிதா பேசும்போது, "நீங்கள் பேசும்போது உங்களுக்கு அது பர்சனல் டார்கெட்டா தெரியவில்லையா?" என்று பதில் அளிக்கிறார். அப்போது சுனிதா, "உங்கள் வேலையை நீங்கள் சரியாக பார்த்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது" என்று சொல, "நீங்க இங்க வந்து சொன்னதுக்கு நான் ரீசன் சொல்லுகிறேன்" என்று சௌந்தர்யா பதிலளிக்கிறார்.
மேலும், "நான் என்ன எடுத்திருக்கிறேனோ, என்னால் அதைத்தான் செய்ய முடியும்" என்று தன் மீதான புகார்களுக்கு ஒரு நொடி கூட தாமதிக்காமல் சௌந்தர்யா கொடுத்த இந்த பதிலடி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஏற்கனவே பிக் பாஸ் பார்வையாளர்கள் சௌந்தர்யாவை "சவுண்ட் சௌந்தர்யா" என்று கூறிவரும் நிலையில், அதற்கேற்ப அவர் பதிலடி கொடுத்துள்ளதால் இன்றைய எபிசோடு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.