தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் நாளில் படப்பிடிப்புகள் ரத்து

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் நாளில் படப்பிடிப்புகள் ரத்து

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில் அன்றைய தினம் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67 வது ஆண்டு பேரவைக்   கூட்டம் வரும் செப்டம்பர் 10-ம் தேதி  காலை 10 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்க  வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் M.நாசர் அவர்கள் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. நடிகர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், நடப்பு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) ஆகிய அமைப்புகள் அன்றைய தினம் பொதுக்குழுவிற்காக படப்பிடிப்புகளை ரத்து செய்து விடுமுறை அளித்துள்ளது. 

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் நாளில் படப்பிடிப்புகள் ரத்து

இந்தக் கூட்டத்தில் துணைத் தலைவர்  கருணாஸ் அவர்கள் 2022– 2023 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டு, தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு அறிக்கையை சமர்ப்பிப்பார். பொருளாளர் SI.கார்த்தி அவர்கள், சங்கத்தின் எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்தும், பொதுச்செயலாளர் விஷால் அவர்கள், சங்கத்தின் எதிர்கால நலத்திட்டங்களை குறித்தும் விளக்கி உரையாற்ற, துணைத்தலைவர் பூச்சி எஸ். முருகன் அவர்கள் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெறுகிறது. இந்நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்களாக உள்ள முன்னணி நடிகர் / நடிகைகள் உட்பட நாடக கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர்.

Share this story