பிரபல தென்கொரிய நடிகை மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை கிம் சே-ரோன் தனது வீட்டில் நேற்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
பிரபல தென்கொரிய நடிகை கிம் சே-ரோன் (24). இவர், கடந்த 2010-ம் ஆண்டு வெளியான 'தி மேன் பிரம் நோவேர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவருக்கு, கடந்த 2022ம் ஆண்டு, மது போதையில் வாகனம் ஓட்டியதற்காக 20 மில்லியன் வொன் (சுமார் $13,800) அபராதம் விதிக்கப்பட்டது.
இது மக்கள் மத்தியில் இவர் மீது அதிர்ப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதனால், அவர் புதிய திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் பல சிரமங்களை சந்தித்தாக கூறப்படுகிறது.இந்நிலையில், நடிகை கிம் சே-ரோன் தனது வீட்டில் நேற்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் கிம் சே-ரோனின் மரணத்தில் சந்தேகப்படும்படி எதுவும் கண்டறியப்படவில்லை எனவும், அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் விளக்கம் கொடுத்துள்ளனர். கிம் சே-ரோனின் மரணம் திரைப் பிரபலங்கள், ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.