விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் சிறப்பு மருத்துவ முகாம்... நடிகர் அஜித் கோரிக்கை...

விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் சிறப்பு மருத்துவ முகாம்... நடிகர் அஜித் கோரிக்கை...

மகிழ்திருமேனி இயத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜர்பைஜானில் தொடங்கியது. படப்பிடிப்புக்காக அஜித் மட்டுமன்றி த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினரும் அஜர்பைஜான் பறந்தனர். கலை இயக்குநர் மிலனும் அவர்களுடன் அஜர்பைஜான் சென்றிருந்தார். 

விடாமுயற்சி படப்பிடிப்புக்காக ஓட்டல் அறையில் தயாராகிக் கொண்டிருந்தபோது, திடீரென கலை இயக்குநர் மிலனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக படக்குழுவினர் மருத்துவமனை அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை தரப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் திரைப்பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் சிறப்பு மருத்துவ முகாம்... நடிகர் அஜித் கோரிக்கை...

இதையடுத்து, விடாமுயற்சி படத்தில் பணியாற்றும் அனைத்து கலைஞர்களின் உடல்நலத்தை பரிசோதிக்க சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்ய, தயாரிப்பாளருக்கு நடிகர் அஜித் வலியுறுத்தியுள்ளார். 

Share this story