சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட 'அந்தகன்' படக்குழு

Andhagan


தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த நடிகர் பிரசாந்த், பின்னர் திரை துறையில் இருந்து சில ஆண்டுகளாக விலகி இருந்தார். தற்போது சினிமாத்துறைக்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். அவர் நடிப்பில் சென்ற வாரம் வெளியான அந்தகன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்தகன் படம் வெளியானத்தை அடுத்து, சுதந்திர தினத்தன்று அந்தகன் படத்தின் சிறப்பு போஸ்டர் வராதா? என்று நெட்டிசன்கள் இன்று மீம்ஸ்களை பறக்கவிட்டு வந்தனர். ஏனெனில் கடந்த 2 ஆண்டுகளாக ஒவ்வொரு பண்டிகை தினத்திலும் சிறப்பு போஸ்டர் ஒன்றை அந்தகன் படக்குழு வெளியிட்டு வந்தது. படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளிப்போனாலும் சிறப்பு போஸ்டர் மட்டும் தவறாமல் விடும். இந்த சிறப்பு போஸ்டர்கள் அந்த சமயத்தில் இணையத்தில் வைரலாகின.இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்தகன் படத்தின் சிறப்பு போஸ்டரை நடிகர் பிரசாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சிறப்பு போஸ்டரை பகிர்ந்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Share this story