தெறிக்கும் பட்டாசு... ப்ரீ புக்கிங் தொடக்கம்.. `விடாமுயற்சி' திருவிழா ஆரம்பம்..

ak

அஜித் நடித்துள்ள `விடாமுயற்சி' படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கி சில மணி நேரங்களிலேயே பல்வேறு திரையரங்குகளில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன.


நடிகர் அஜித்தின் படம் என்றால் கண்டிப்பாக வசூலில் சாதனை படைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. கடைசியாக வெளிவந்த துணிவு படம் வரை இதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் வருகிற 6ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளிவரவிருக்கும் விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் வசூலும் பட்டையை கிளப்பி வருகிறது. வெளிநாடுகளில் மட்டுமே இதுவரை நடந்த வந்த இப்படத்தின் ப்ரீ புக்கிங், தமிழகத்திலும் துவங்கியுள்ளது.

ak

இந்த நிலையில், தமிழ்நாட்டில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே விடாமுயற்சி படம் ரூ. 2.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். மேலும் வெளிநாடுகளில் ரூ. 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படம் முன்பதிவிலேயே ரூ.25 கோடிக்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 

Share this story