மீண்டும் விளையாட ஆரம்பிக்கலாமா - ஸ்குவிட் கேம் 2 டீசர் வெளியீடு...?
தென் கொரிய நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள கடன் நிறுவனங்களின் அடாவடித்தனத்தை முன்னிறுத்தி கடனில் மூழ்கிய மக்களின் பொருளாதார சூழலைப் பயன்படுத்தி ஆடும் விபரீத விளையாட்டு ஸ்குவிட் கேம். கடந்த 2021 ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தொடரின் பெயரும் அதுவே. முதல் சீசனில் 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார் இந்த தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது. இந்நிலையில் இந்த ஸ்குவிட் கேம் தொடரின் இரண்டாவது சீசன் உருவாகியுள்ளது. வரும் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி இந்த தொடர் வெளியாகும் எனவும் நெட்பிளிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், 2 வது சீசனின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் கதாநாயகனான லீ ஜுங் மீண்டும் ஸ்குவிட் கேம் விளையாட்டு 456 வீரராக விளையாட வருகிறார். ஆனால் இந்த தடவை அவர் மற்ற மக்களிடம் இந்த விளையாட்டை விளையாட வேண்டாம் என நிறுத்த வற்புருத்துகிறார் ஆனால் யாரும் இவரது பேச்சை கேட்காமல் விளையாட தயாராவதுப் போல் டீசர் காட்சிகள் அமைந்துள்ளது.