'ஸ்குவிட் கேம்' 2-வது சீசனின் டிரெய்லர் ரிலீஸ்...
'ஸ்குவிட் கேம்' 2-வது சீசன் வருகிற டிசம்பர் மாதம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் 'ஸ்குவிட் கேம்'. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார். இந்த தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது. இதனையடுத்து இந்தத் தொடரின் அடுத்த சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
Let the new games begin.
— Netflix (@netflix) November 26, 2024
Squid Game Season 2 ⏺️ 🔼 ⏹️ DECEMBER 26 pic.twitter.com/1AcTYwijzk
அதன்படி, தற்போது இந்தத் தொடரின் 2-வது சீசன் உருவாகி வருகிறது. மேலும், வரும் டிசம்பர் மாதம் 26-ம் தேதி இந்த தொடர் வெளியாகும் எனவும் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 2-வது சீசனின் புதிய டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. அந்த டீசர் இணையத்தில் வைரலானது. அதனை தொடர்ந்து தற்போது இந்த தொடரின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த தொடரின் 3-வது சீசன் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.