ஸ்குவிட் கேம் சீசன் 3 அப்டேட் கொடுத்த நெட்பிளிக்ஸ்
1735740240456
கடந்த 2021 ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஸ்குவிட் கேம் தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குநர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார். தென் கொரிய நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள கடன் நிறுவனங்களின் அடாவடித்தனத்தை முன்னிறுத்தி கடனில் மூழ்கிய மக்களின் பொருளாதார சூழலைப் பயன்படுத்தி ஆடும் விபரீத விளையாட்டு தான் இந்த ஸ்குவிட் கேம். ஸ்குவிட் கேம் தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம்
பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது. இதனையடுத்து உருவான ஸ்குவிட் கேம் தொடரின் இரண்டாவது சீசன் கடந்த மாதம் 26 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஸ்குவிட் கேம் சீசன் 2 வெளியாகி சில நாட்களே ஆகிய நிலையில், ஸ்குவிட் கேம் சீசன் 3-க்கான அப்டேட்டை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டிலேயே ஸ்குவிட் கேம் சீசன் 3 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்குவிட் கேம் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.