"ஸ்ரீ காந்தின் திருமணமே ஒரு போராட்டம்தான்" -போதையால் மாறிய ஸ்ரீகாந்தின் பாதை.

நடிகர் ஸ்ரீ காந்த் ரோஜாக்கூட்டம் ,நண்பன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் .இப்போது அவர் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கியுள்ளார் .மேலும் அவர் திருமண போராட்டம் பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது
தற்போது போதை பொருள் பயன்படுத்திய சட்டப் போராட்டங்களை எதிர்கொண்டு வரும் ஸ்ரீகாந்த் ஏற்கனவே தனது மனைவியால் சட்டப் போராட்டத்திற்கு ஆளாகியுள்ளார்.
நடிகை ஸ்ரீகாந்த் வந்தனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் நடிகர் ஸ்ரீகாந்துக்கும் சென்னையை சேர்ந்த வந்தனாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. பிறகு இருவரும் வீட்டிற்கு தெரியாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து மூன்று மாதங்கள் கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சமயத்தில் வந்தனாவின் குடும்பத்தின் மீது ஏகப்பட்ட மோசடி புகார்கள் இருப்பது ஸ்ரீகாந்துக்கு தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து வந்தனாவை பார்க்கச் செல்வதை நிறுத்தி உள்ளார் ஸ்ரீகாந்த்.
2008ம் ஆண்டு இந்த சம்பவம் சினிமா உலகில் பரபரப்பை உண்டு பண்ணியது .பின்னர் வந்தனா ஸ்ரீ காந்துடன் சேர்ந்து வாழ்வேன் என்று போராட்டம் நடத்தினார் ,பின்னர் கோர்ட்டில் இந்த வழக்கு நடைபெற்றது .அப்போது கோர்ட் ஸ்ரீ காந்தை வந்தனாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று உத்தரவு போட்டது .இப்படி பல போராட்டங்களுடன் ஸ்ரீகாந்த் வாழ்க்கை துவங்கியது .இப்போது போதை பொருள் வழக்கில் சிக்கியுள்ளார்