'புஷ்பா 2' படத்தில் ஸ்ரீலீலா நடனமாடுவதை உறுதி செய்த படக்குழு...!
'புஷ்பா 2' படத்தில் நடனமாட ஷ்ரத்தா கபூர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தமாகி இருக்கிறார். தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது. 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின. 'புஷ்பா' படத்தில் 'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தார். இந்தப் பாடல் இந்தியா முழுவதும் ஹிட்டானது. அடுத்ததாக, புஷ்பா -2 படத்தில் யார் அப்படி நடனமாடுவார் என எதிர்பார்ககபட்டது. அதற்கு ஷ்ரத்தா கபூர் தேர்வு செய்யப்படுவார் என்று ஆரம்பத்தில் வதந்திகள் பரவியநிலையில், நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தமாகி இருக்கிறார்.
Team #Pushpa2TheRule welcomes The Dancing Queen @sreeleela14 on board for the #Kissik Song of the Year❤🔥
— Mythri Movie Makers (@MythriOfficial) November 10, 2024
This song is going to be a dance feast and a musical delight 💥💥💥
GRAND RELEASE WORLDWIDE ON 5th DECEMBER, 2024.#Pushpa2TheRuleOnDec5th
Icon Star @alluarjun… pic.twitter.com/mKZz6Dvk3n
இது தொடர்பான புகைப்படமும் சமீபத்தில் இணையத்தில் கசிந்து வைரலானது. இந்நிலையில், அந்த பாடலுக்கான தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.அதன்படி, இப்பாடலுக்கு 'கிஸ்சிக்' என பெயரிடப்பட்டுள்ளது. 'புஷ்பா 2 தி ரூல்' படம் அடுத்த மாதம் 5ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.