மாநகரம் படபுகழ் ஸ்ரீ, பிரபல மலையாள கவர்ச்சி நடிகையை திருமணம் செய்துகொண்டாரா?

photo

தமிழில் வழக்கு எண் 18/9 படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீ, தொடர்ந்து இவர் வில் அம்பு, மாநகரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அடுத்து பிரபல சின்னத்திரை ரியாலிட்டி ஷோவான ‘பிக்பாஸ்’ தமிழ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டார்.  ஆனால் நிகழ்ச்சி தொடங்கி நான்கே நாட்களில் அதிலிருந்து வெளியேறினார். இந்த நிலையில் அவர் மணக்கோலத்தில் உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

photo

அந்த புகைப்படத்தில் ஸ்ரீயின் அருகில் இருப்பது மலையாளத்தில் கவர்ச்சி நடிகையாக சானியா ஐயப்பன். இவர் மலையாளத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான குயின் படத்தில் நடித்து அறிமுகமானார். இவர்கள் இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது. அதன்பின்னர் அது உண்னையில்லை என்று தெரியவந்துள்ளது. ஸ்ரீ மற்றும் சானியா ஐபப்பன் இருவரும் ‘இறுகப்பற்று’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர் அதில்வரும் மணக்கோலம்தான் இது என தெரியவந்துள்ளது.

photo

Share this story