பிரபுதேவா படக்குழுவை பாராட்டிய இலங்கை பிரதமர்
1695976701069

படப்பிடிப்புக்காக இலங்கை சென்றுள்ள முசாசி படக்குழு, அந்நாட்டு பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து வாழ்த்து பெற்றது.
அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘முசாசி’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படததில் நடிகரும், பிரபல நடன இயக்குநருமான பிரபுதேவா நடித்துள்ளார். இந்த படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் மாஸ்டர் மகேந்திரன், ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியன், தங்கதுரை, மலையாள நடிகை லியோனா லிஷோய், அருள்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில், முசாசி படக்குழு படப்பிடிப்புக்கா இலங்கை சென்றுள்ளனர். படக்குழுவை நேரில் அழைத்த இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.