பலமுறை கண்ணீர் விட்டு அழுத ஸ்ரீலீலா -ஏன் தெரியுமா ?

sri leela
கன்னடத்தில் நடித்துவிட்டு, பிறகு தெலுங்கிற்கு வந்து முன்னணி நடிகையாக மாறிய லீலா, ‘பராசக்தி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்போது தனுஷுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தன்னைப் பற்றி வெளியாகும் ட்ரோல்கள் குறித்து உருக்கத்துடன் அவர் கூறியதாவது: நான் நடித்து முடித்த படங்கள் வெளியாகும்போது, சோஷியல் மீடியாவில் பல்வேறு தரப்பினர், என்னைப் பற்றி எதிர்மறையான கருத்துகளை பரப்பி சந்தோஷப்படுகின்றனர்.
ஆரம்பகாலத்தில் அதை நினைத்து வருத்தப்பட்டேன். அந்த ட்ரோல்களால் மனம் வருந்தி, பலமுறை கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். ஆனால், தற்போது பாராட்டு மற்றும் விமர்சனங்களை சாதுர்யமாக சமாளிக்க கற்றுக்கொண்டேன். எந்தெந்த கருத்து முக்கியமானதோ அதை மட்டும் ஏற்றுக்கொண்டு, எதை புறக்கணிக்க வேண்டுமோ அதை தவிர்த்துவிடுகிறேன். அந்தளவுக்கு பக்குவம் அடைந்துள்ளேன்.

Share this story