'சில நரிகளுக்கு உடலை விருந்தளிக்க வேண்டும்' - நடிகை ஸ்ரீரெட்டி பதிவு

sri reddy

பாலியல் தொல்லை கொடுக்கும் ஆண்களை நடிகை ஸ்ரீரெட்டி நரி என்று விமர்சித்திருக்கிறார்.நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் தெலுங்கு கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி. பட வாய்ப்பு தருவதாக தன்னை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார். உடைகளை களைந்து போராட்டமும் நடத்தினார். தற்போது, ஹேமா கமிஷன் அறிக்கையால் மலையாள பட உலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், நடிகை ஸ்ரீரெட்டியின் எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், 'ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் தொல்லை தரும் நரியின் கதை இருக்கும். பெண்களுக்கும் இலக்கு இருக்கிறது. அதை அடைய முயற்சிக்கும் பெண்களை திமிர் பிடித்தவள் என்பார்கள். பெண்கள் கடுமையாக உழைக்கும்போது சுற்றிலும் தடைகள் இருப்பதை பார்க்க முடியும். அதை கடந்து இலக்கை அடைய சில நரிகளுக்கு உடலை உணவாக விருந்தளிக்க வேண்டும். துரதிஷ்டவசமாக சில பெண்களும் இதை ஆதரிக்கிறார்கள், ' என்றார்

Share this story