சந்திரபாபு நாயுடு குறித்து அவதூறு : மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட ஸ்ரீரெட்டி

sreereddy

பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி, நடிகர்களும்-இயக்குனர்களும் தனக்கு பட வாய்ப்பு தருவதாக பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்ததும், அரை நிர்வாண போராட்டம் நடத்தியதும் பரபரப்பானது மேலும் அப்போதைய ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு ஆகியோர் மீதும் அவதூறாக பேசி வீடியோக்கள் வெளியிட்டார். சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரியாகவும், பவன் கல்யாண் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றுள்ள நிலையில், அவர்களுக்கு எதிரான அவதூறு வீடியோக்கள் தொடர்பாக ஆந்திர போலீசார் ஸ்ரீரெட்டி மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இதில் அவர் கைதாகலாம் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சந்திராபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டு ஸ்ரீரெட்டி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் "நான் இருவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் குடும்பத்தினரால் வெளியே செல்ல முடியவில்லை. வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை. இனிமேல் போலீஸ் வழக்கு, கைது என்று மானத்தை வாங்காதே என்று குடும்பத்தினர் கெஞ்சுகிறார்கள். இனிமேல் உங்களை பற்றி அவதூறாக பேசமாட்டேன்'' என்று வீடியோவில் கூறியுள்ளார்.
 

Share this story