“கண்ணே…. கலைமானே….”- ஸ்ரீ தேவியின் பிறந்தநாளில், புகைப்படத்தை டூடுளில் வைத்து அசத்திய கூகுள்.

photo

ஸ்ரீதேவியின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் தனது டூடுளில் அவரது புகைப்படத்தை வெளியிட்டு கௌரவப்படுத்தியுள்ளது.

photo

தமிழகத்தில் பிறந்த ஸ்ரீ தேவி, நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தனது 4 வயதிலேயே நடிக்க தொடங்கிவிட்டார். ஸ்ரீ, முதலில் ‘கந்தன் கருணை’ படத்தில் முருகன் வேடமணிந்து நடித்து சினிமாவிற்குள் நுழைந்தார். தொடந்து எம்ஜிஆர், கமல், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து புகழ்பெற்றார். பல மொழிகள் பேசும் திறனைக்கொண்டவர் ஸ்ரீ தேவி.

photo

ஸ்ரீதேவி முதல் முறையாக தேசிய விருது வங்கிய திரைப்படம் “ மூன்று முடிச்சு” தொடர்ந்து தனது அழகாலுல், தத்ரூபமான நடிப்பாலும் எக்கசக்கமான ரசிகர்களை பெற்ற ஸ்ரீ தேவி தமிழ் மொழியை கடந்து இந்தி உலகில் கால் பத்திதார். அங்கு பாக்ஸ் ஆபீஸ் நாயகியாக வலம் வந்த இவர் புகழின் உச்சிக்கே சென்றார். தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பளரான போனிகபூரை 1996ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.  இந்த நிலையில் அவரது தாயர் இறந்துவிடவே சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.   இருந்தும் சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் இவரை காணமுடிந்தது. நீண்ட இடைவேளைக்கு பின்னர், 2012ஆம் ஆண்டு இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தில் நடித்தார். இதுதான் அவரது கடைசி படமாக அமைந்தது. காரணம் 2018ஆம் ஆண்டு துபாயில் ஓட்டலில் தங்கியிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஸ்ரீ தேவி மறைந்தாலும் வெற்றி நாயகியாக வலம் வந்த அவரின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் ஸ்ரீதேவியின் புகைப்படத்தை  டூடுளில் வைத்து கௌரவித்துள்ளது.

Share this story