தேசிய விருது வாங்கினார் ஸ்ரீகாந்த் தேவா

தேசிய விருது வாங்கினார் ஸ்ரீகாந்த் தேவா

இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது. இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. 

இதில் தமிழ்க் கலைஞர்கள் மற்றும் தமிழ்ப் படங்கள் வகையில் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற பிரிவில் கடைசி விவசாயி விருது வென்றது. மேலும் அப்படத்தில் நடித்த மறைந்த விவசாயி நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த பின்னணி பாடகி என்ற பிரிவில் இரவின் நிழல் படத்தில் இடம் பெற்ற 'மாயவா சாயவா...' பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி திரைப்படம் சாராத பிரிவில், சிறப்பு விருதாக  'கருவறை' என்ற ஆவணப்படத்திற்காக ஸ்ரீ காந்த் தேவாவிற்கும், சிறந்த கல்வித் திரைப்படம் என்ற பிரிவில் 'சிற்பங்களின் சிற்பங்கள்' படத்திற்கும் விருது அறிவிக்கப்பட்டது.

தேசிய விருது வாங்கினார் ஸ்ரீகாந்த் தேவா

இந்த நிலையில் 69வது தேசியத் திரைப்பட விருது விழா விக்யான் பவனில் நடைபெற்று வருகிறது. மத்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விருது வழங்கி வருகிறார். அந்த வகையில், குடியரசுத் தலைவரிடமிருந்து ஸ்ரீகாந்த் தேவா தேசிய விருது வாங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

Share this story