ஸ்ரீலீலா நடிக்கும் 'ராபின்ஹுட்' படத்தின் முதல் பாடல் ரிலீஸ்...!
'கிஸ்ஸிக்' பாடலை தொடர்ந்து, இப்பாடல் வெளியாகி உள்ளதால் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தில் இடம்பெற்ற குர்ச்சி மடத்த பெட்டி பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமான ஸ்ரீலீலா, தற்போது சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். கிஸ்ஸிக் என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் நேற்று முன்தினம் வெளியானது. மறுபுறம் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் ராபின்ஹுட். நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்குகிறார். ராஜேந்திர பிரசாத் ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் 25-ம் தேதி வெளியாக உள்ளது.
The LOVE FUSION SONG OF THE YEAR is here!
— Mythri Movie Makers (@MythriOfficial) November 26, 2024
Start tapping your feet to the peppy beats and the classical notes 🕺💃#Robinhood First Single #OneMoreTime out now!
▶️ https://t.co/2V1vD00M4B
Sung by @gvprakash & @VidyaVox 🎙️
GRAND RELEASE WORLDWIDE ON DECEMBER 25th 💥… pic.twitter.com/rcpZ96HyQd
இந்நிலையில், ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடலான 'ஒன் மோர் டைம்' தற்போது வெளியாகி உள்ளது. கிஸ்ஸிக் பாடலை தொடர்ந்து, இப்பாடல் வெளியாகி உள்ளதால் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படத்தைதொடர்ந்து ஸ்ரீலீலா, ரவி தேஜாவுக்கு ஜோடியாக 'மாஸ் ஜாதரா' படத்தில் நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் 9-ம் தேதி வெளியாகிறது.