போதை பொருள் பார்ட்டியில் ஸ்ரீநாத் பாஸி, பிரயாகா மார்ட்டின்?

drug case


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர், ரவுடி கும்பல் தலைவர் ஓம்பிரகாஷ். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அவரை போலீஸார் நேற்று முன் தினம் கைது செய்தனர். அவரின் கூட்டாளி சிஹாஸும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. போலீஸாரின் விசாரணையில், ஓம்பிரகாஷை திரையுலகினர் உட்பட 20 பேர் ஓட்டலில் சென்று சந்தித்தது தெரிய வந்தது. போலீஸார் அங்கு செல்வதற்கு முன், போதைப் பொருள் பார்ட்டி நடந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் போலீஸாரின் ரிமாண்ட் அறிக்கையில், அங்கு சென்றதாக நடிகர் ஸ்ரீநாத் பாஸி, நடிகை பிரயாகா மார்ட்டின் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. "குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்கள் அடிப்படையில் விசாரித்து வருகிறோம். கூடுதல் விவரங்களை இப்போது வெளியிட இயலாது" என்று கொச்சி நகர காவல்துறை துணை ஆணையர் கே.எஸ். சுதர்சன் தெரிவித்துள்ளார்.

Share this story