ஸ்ரீ வள்ளி கதாபாத்திரம் குறித்த ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து... ராஷ்மிகாவின் ரியாக்ஷன் என்ன தெரியுமா ?

rashmika mandana

ஸ்ரீ வள்ளி கதாபாத்திரம் குறித்த சர்ச்சைக்கு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா பதில் அளித்துள்ளார். 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்  சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘புஷ்பா’ படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்த ஸ்ரீ வள்ளி கதாபாத்திரம், தனக்கு நன்றாகவே பொருந்திருக்கும் என்று கூறியிருந்தார்.  இந்த கருத்து இணையத்தில் சர்ச்சை ஏற்படுத்தியது.  ஆனால் தனது கருத்து தவறுதலாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது. 

இது குறித்து நேற்று முன்தினம் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், ஒரு நேர்காணலின் போது என்னிடம் தெலுங்கு திரையுலகில் நான் எந்த மாதிரியான இடங்களில் நடிக்க விரும்புகிறேன் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளிக்கியில் எனக்கு தெலுங்கு திரளுகும் மிகவும் பிடிக்கும் எனக்கு விருப்பமான பாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக தெலுங்கு படங்களில் நடிப்பேன் உதாரணத்திற்கு புஷ்பா இருவரும் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என பதில் அளித்தேன். 

rashmika mandana

இருப்பினும் இருப்பினும் தூரதிர்ஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. புஷ்பா படத்தில் நடித்த நடிகை ரஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒருபோதும் குறை கூறவில்லை. இதனால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன். ரஷ்மிகா மந்தனாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டுமே உண்டு என்று கூறினார். 

rashmika mandana

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அறிக்கைக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா பதிலளித்துள்ளார். அதில் உங்களது அறிக்கையை இப்போதுதான் பார்த்தேன். நீங்கள் எந்த அர்த்தத்தில் கூறினீர்கள் என்று எனக்கு நன்றாகவே புரிந்தது. நம்மை பற்றி நாம் விளக்கம் கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் நான் உங்கள் மீது அன்பும், மரியாதையும் மட்டுமே வைத்துள்ளேன் என்று உங்களுக்கு தெரியும். மீண்டும் ஒருமுறை 'ஃபர்ஹானா' படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

Share this story