சுருதி ஹாசன் தற்போது எந்தெந்த படங்களில் நடித்து வருகிறார் தெரியுமா ?

sruthi

சமீபத்தில் சினிமா பற்றி பேசிய ஸ்ருதிஹாசன், ‘நான் எப்படி நடிகையானேன் என்ேற தெரியவில்லை’ என்று ஆச்சரியப்பட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எனக்கு எப்போதுமே கேமராவுக்கு பின்னால் இருந்து இயங்குவதற்குத்தான் ஆசை. ஆனால், திடீரென்று நான் எப்படி நடிகையாக மாறினேன் என்று எனக்கே தெரியவில்லை. அதை நினைத்து இன்றுவரை நான் ஆச்சரியப்படுகிறேன். ‘ஹே ராம்’ படத்தில் நடித்தது திட்டமிட்ட செயல் கிடையாது. அது மிகவும் தற்செயலாக நடந்தது. எனது பெற்றோர் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் கச்சிதமான வேலையை எதிர்பார்க்கும் டாஸ்க் மாஸ்டர்கள்.

அவர்களுடன் பணியாற்றி பாராட்டு பெற்றது என்பது, என்னால் எப்போதுமே மறக்க முடியாத ஒரு சிறந்த அனுபவம். எனது இசை தேவைகளுக்காகவும், சொந்தமாக ஏதாவது செய்து சம்பாதிப்பதற்காகவும் மட்டுமே ‘லக்’ என்ற படத்தில் நடிக்க சம்மதித்தேன். அதற்கு பிறகுதான் நடிப்பு மீது எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் நடித்தேன். தற்போது விஜய் சேதுபதியுடன் ‘ட்ரெயின்’, துல்கர் சல்மானுடன் ‘ஆகாசம்லோ ஒக தாரா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்.

Share this story