நான் திருமணம் செய்துகொள்ள நல்ல பார்ட்னர் வேண்டும்.-ஸ்ருதிஹாசன் அதிரடி பேட்டி

sruthi hasan

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர், ஸ்ருதிஹாசன். பல படங்களில் பாடியுள்ளார். தற்போது 39 வயதாகும் அவர், இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே இருக்கிறார். இதற்கு முன்பு இரு முறை காதலித்து, அதற்கு பிறகு பிரேக்அப் செய்திருக்கிறார். இந்நிலையில், திருமணம் செய்துகொள்வது குறித்து அவர் அளித்த பேட்டி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அது வருமாறு:

மக்கள் பிரமாண்டமாக திருமணம் செய்வதற்காக வீண்செலவு செய்கிறார்கள். ஒருவேளை நான் திருமணம் செய்துகொள்ளும் நிலை வந்தால், அதை பதிவு திருமணமாக, மிகவும் எளிமையாக ரிஜிஸ்டர் ஆபீசுக்கு சென்று செய்துகொள் வேன். திருமணம் செய்தால் கண்டிப்பாக தாயாக இருக்க வேண்டும், குடும்பம் என்று வாழ்ந்தாக வேண்டும். நான் திருமணம் செய்தால் குழந்தைகளை பெற்றெடுப்பேன். குழந்தைகளுக்கு அம்மா, அப்பா இருவருமே மிகவும் முக்கியம். கண்டிப்பாக நான் சிங்கிளாக இருக்க மாட்டேன். நான் திருமணம் செய்துகொள்ள நல்ல பார்ட்னர் வேண்டும்.

Share this story