கூலி படத்தில் சத்தியராஜ் மகளாக நடிக்கும் பிரபல நடிகை - யார் தெரியுமா?
விரைவில் திரைக்கு வரும் கூலி படம் பற்றி மக்களிடையே அதிக எதிர் பார்ப்பு நிலவுகிறது .இந்த படத்தின் கதை என்ன ,யார் யாருக்கு என்ன கதா பாத்திரம் என்று மக்கள் கேட்கின்றனர் .இந்த படத்தினை இயக்கும் லோகேஷ் கதை பற்றி ரகசியமாக வைத்துள்ளார் .ஆனால் இப்படத்தில் நடிக்கும் ஒரு நடிகை பற்றிய கதா பாத்திரம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது .அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ''கூலி'' படத்தில், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், அமீர் கான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இதனால் படத்தின் மீது இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படம் வருகிற 14-ம் தேதி திரைக்கு
வருகிறது. இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகை ஸ்ருதிஹாசன், கூலி படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.
அதாவது, கூலி படத்தில் என் கதாபாத்திரம் கொலை செய்யப்படுமா?, நான் சண்டையிடுவேனா?, என ரசிகர்கள் கேள்வி கேட்கின்றனர்.இந்த படத்தில் நான் சண்டையெல்லாம் போடவில்லை. ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜின் மகளாக நடித்துள்ளேன்.இதன் படத்தின் கதையை கேட்டபோது, எனது கதாபாத்திரத்தை அதிகமான பெண்கள் தொடர்புப்படுத்தி கொள்ளும்படி இருக்குமென தோன்றியது.
இந்த படம் டெஸ்டோஸ்டிரோன் நிறைந்த உலகமாக இருக்கும். ஆனால் நான் அதில் ஆரோக்கியமான ஈஸ்ட்ரோஜனாக இருப்பேன். என்று கூறியுள்ளார்.

