திருமணம் பற்றி கேள்வி கேட்ட சுஹாசினி -அதிர்ச்சி பதில் கொடுத்த சுருதி ஹாசன்

sruthi hasan

சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஸ்ருதிஹாசன் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியை நடிகையும், கமலின் சகோதரர் மகளுமான சுஹாசினி எடுத்தார். அப்போது ஸ்ருதியிடம் அவர், ‘எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறாய்’ என்று கேட்டார். உடனே ஸ்ருதி, ‘நீங்கள் எப்போ விவாகரத்து வாங்கப்போகிறீர்கள்’ என்று கோபத்தை வெளிக்காட்டாதபடி பதில் கேள்வி கேட்டார். அதை கேட்டு சுஹாசினி ஒருகணம் அதிர்ச்சியாகிவிட்டார். பிறகு சிரித்து சமாளித்தார். இதனைப் பார்த்த ரசிகர்களோ, ‘இந்த பேட்டியை பார்த்து சுஹாசினியின் கணவர் மணிரத்னம் ஷாக் ஆகிருப்பாரு’ என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.. 

Share this story