"தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது முகத்தை மார்பிங் செய்வதை தடுக்க வேண்டும்" -ஸ்ருதிஹாசன் மனு

sruthi hasan

தனது பெயர், புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துபவர்களிடம் இருந்து ரூ. 15 கோடி இழப்பீடு வழங்க கோரி நடிகை ஸ்ருதி ஹாசன் வழக்கு தொடர்ந்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் மட்டுமின்றி, இந்தியிலும் பிசியாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். இவர் தனது பெயர், படம், உருவம், குரல் மற்றும் ஆளுமை உரிமைகளை பாதுகாக்க கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது மனுவில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டீப்பேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது முகத்தை மார்பிங் செய்து ஆபாசமான முறையில் புகைப்படங்கள், வீடியோக்கள் உருவாக்கப்பட்டு இணையத்தில் வைரலாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், தனது அனுமதியின்றி பெயர் மற்றும் படத்தைப் பயன்படுத்தி இணையத்தில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதுடன், போலி விளம்பரங்களும் வெளியிடப்படுவதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Share this story