கூலி அப்டேட் : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்த ஸ்ருதிஹாசன்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் படக்குழு குறித்த அப்டேட்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வரும் நிலையில் இன்றைய நாளின் பிரபலம் குறித்த அப்டேட் தற்போது ரிலீசாகி இருக்கிறது.

ஜெய்லர் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தன்னுடைய நடிப்பில் அதீத கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவரின் வேட்டையன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் தற்போது கூலி திரைப்படத்தில் இணைந்து இருக்கிறார்.இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் டைட்டில் ப்ரோமோவிலேயே ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. இப்படத்தின் சூட்டிங் தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.


பொதுவாக லோகேஷின் ஸ்டைலில் இப்படம் வேறொரு ஸ்டைலில் வித்தியாசமாக அமைக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. மற்ற படங்களின் எந்த சாயிலும் இந்த படத்தில் இருக்கக் கூடாது என்பதும் ரஜினிகாந்தின் முக்கிய கட்டளையாகவும் இருக்கிறதாம். இந்நிலையில், கூலி படக்குழு தினமும் ஒரு படத்தின் கேரக்டர் குறித்த போஸ்டரை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் முதலில் மலையாள நடிகர் ஷாபீன் ஷாபீர் தயாள் என்ற கேரக்டரில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நாகர்ஜூனா சைமன் என்ற கேரக்டரில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. முதலில் மலையாள  பிரபலம், அடுத்து தெலுங்கு பிரபலம் என்பதால் இன்று கன்னடா அல்லது ஹிந்தி பிரபலமாக யாரும் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஏனெனில் படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா ராவ் மற்றும் இந்தி நடிகர் அமீர்கான் நடிப்பதாக தகவல்கள் கசிந்திருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்றைய அப்டேட்டாக நடிகை ஸ்ருதிஹாசன் ப்ரீத்தி என்ற கேரக்டரில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த போஸ்டரும் வெளியிடப்பட்டிருக்கிறது.

Share this story