ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் ஒடிசா படப்பிடிப்பு நிறைவு

magesh babu

இயக்குனர் ராஜமவுலி - மகேஷ்பாபு கூட்டணியில் உருவாகும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி அடுத்து நடிகர் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கி வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த படத்தில் மகேஷ் பாபு உடன் பிரித்விராஜ் மற்றும் பிரியங்கா சோப்ரா இருவரும் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.rajamouli

கடந்த மாதத்தில் இருந்து இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஒடிசாவில் உள்ள கோரட்பூர் பகுதிகளில் நடந்தது. மகேஷ் பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா சம்மந்தப்பட்ட சில காட்சிகள் , சண்டை காட்சியும், ஒரு பாடலின் சில பகுதியையும் படமாக்கபட்டதாக கூறப்படுகிறது. தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

priyanka

இதற்கு அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில் விரைவில் துவங்கும் என கூறப்படுகிறது. இதனிடையே ஒடிசாவில் படப்பிடிப்பு முடிந்த பின் உள்ளூர் மக்களுடன் படக்குழுவினர் எடுத்த கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 
 

Share this story