கண்கலங்கியபடி வெற்றி திரையரங்கிலிருந்து வெளியே வந்த ’ஸ்டார்’ கவின்

கண்கலங்கியபடி வெற்றி திரையரங்கிலிருந்து வெளியே வந்த ’ஸ்டார்’ கவின்

"ஸ்டார்" படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை கண்டு வெற்றி திரையரங்கிலிருந்து நடிகர் கவின் கண்கலங்கியபடி வெளியே வந்தார்.

Image

‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில், கவின், லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகராக வேண்டும் என்ற கனவு காணும் நடுத்தர வர்க்க இளைஞனின் ‘ஸ்டார்’ ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. இழப்புகள், அவமானம், விரக்தி, குடும்ப சூழல் என உணர்ச்சிகள் நிரம்பி இருக்கும் இப்படத்துக்கு யுவனின் இசை கூடுதல் பலம்.


டாடா, லிப்ட் போலவே ஸ்டார் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வரும் சூழலில் சென்னை வெற்றி திரையரங்கில் படக்குழுவினருடன் இணைந்து ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் கவின் ஸ்டார் படத்தை பார்த்துள்ளார். தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ள கவினை திரையரங்கிற்கு வெளியே கண்ட இளைஞர்கள், அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனை கண்டு நெகிழ்ந்துபோன ஆனந்த கண்ணீருடன் திரையரங்கைவிட்டு வெளியேறும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Share this story