காதலர் தின பரிசாக வெளியாகும் ஸ்டார் திரைப்படம்

காதலர் தின பரிசாக வெளியாகும் ஸ்டார் திரைப்படம்

சின்னத்திரை நடிகராகன கவின் லிப்ட் படத்தின் மூலம் நாயகனாக கோலிவுட்டிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து, அவர் நடித்த டாடா திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  இதைத்தொடர்ந்து, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. நடன இயக்குநர் சதீஸ் இயக்கத்தில் கவின் புதிய படத்தில் நடித்து வருகிறார். அதே போல, பியார் பிரேமா காதல் பட இயக்குநர் இலனுடம் ஸ்டார் என்ற திரைப்படத்திலும் கவின் ஒப்பந்தமாகியிருக்கிறார். ஸ்டார் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

காதலர் தின பரிசாக வெளியாகும் ஸ்டார் திரைப்படம்

இந்நிலையில், ஸ்டார் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினம் அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 

Share this story