‘ஸ்டார்’... கவின் அடுத்த படத்தின் தலைப்பு !

star

 நடிகர் கவின் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் நடித்து வருகிறார் கவின். கடைசியாக அவர் நடித்த ‘டாடா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் அடுத்து நடிக்கும் படங்களை மிகவும் கவனமுடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதனால் அடுத்தடுத்த படங்களுக்கு எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

star

அந்த வகையில் கவனின் அடுத்த படத்தை  ‘பியார் பிரேம காதல்’, ‘கிரகணம்’ ஆகிய படங்களை இயக்கிய இளன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை ரைஸ் ஈஸ்ட் பிரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ‘ஸ்டார்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ஸ்பெஷல் ப்ரோமோ வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story