'தக் லைப்ஃ' படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய ஸ்டார் விஜய்...!

மணிரத்னம் - கனல் ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைப்ஃ' படத்தின் சாட்டிலைட் உரிமையை ஸ்டார் விஜய் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், ஐஸ்வர்ய லட்சுமி, அசோக்செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்ஃ'. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜூன் 5ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த 'தக் லைப்ஃ' படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 150 கோடிக்கும், சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி 60 கோடிக்கும் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தக் லைப்ஃ , பான் இந்தியா படமாக உருவாகி இருப்பதால் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கும் என்று படக்குழு எதிர்பார்க்கிறது. குறிப்பாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தின் வசூலை இந்த படம் முறியடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.