ஸ்டார் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

ஸ்டார் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

சின்னத்திரை நடிகராகன கவின் லிப்ட் படத்தின் மூலம் நாயகனாக கோலிவுட்டிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து, அவர் நடித்த டாடா திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  இதைத்தொடர்ந்து, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. நடன இயக்குநர் சதீஸ் இயக்கத்தில் கவின் புதிய படத்தில் நடித்து வருகிறார். அதே போல, பியார் பிரேமா காதல் பட இயக்குநர் இலனுடம் ஸ்டார் என்ற திரைப்படத்திலும் கவின் ஒப்பந்தமாகியிருக்கிறார். ஸ்டார் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

ஸ்டார் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

இந்நிலையில், ஸ்டார் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. 

Share this story