நாளை முதல் ஆரம்பம்.. 'எம்புரான்' படக்குழு வெளியிட்ட புது அப்டேட்...!

empuran

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்’. 

மலையாளத்தைக் கடந்து மற்ற மொழி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம் தெலுங்கில் 'காட்ஃபாதர்' என்ற பெயரில் ரீமேக்கானது. சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த இப்படத்தை மோகன்ராஜா இயக்கினார். 'லூசிஃபர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என பிருத்விராஜ் அறிவித்திருந்தார். அதன்படி இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது.

mohanlal
ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளார். இப்படத்தில் பிருத்விராஜ் ராணுவ ஜெனரலாக நடித்துள்ளார். மேலும் இப்படம், வருகிற மார்ச் மாதம் 27- ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து, நடிகர் டொவினோ தாமஸ் பிறந்தநாளையொட்டி ’எம்புரான்' படத்தில் அவரது கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்து இருந்தது.


இந்த நிலையில், மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள 'எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை நாளை முதல் படக்குழு அறிமுகப்படுத்தவுள்ளது. நாளை முதல் காலை 10 மணி மற்றும் மாலை 6 மணி என 18 நாட்களில் 36 கதாபாத்திரங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

Share this story