“கற்பனைக்கு எட்டாத அற்புதம் இது”... நெகிழ்ச்சியில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி !

kamal

சிம்புவை இயக்க வாய்ப்பு அளித்ததற்கு உலகநாயகன் கமலுக்கு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி நன்றி தெரிவித்துள்ளார். 

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலே அசத்தலான வெற்றிப் படத்தைக் கொடுத்து கோலிவுட் வட்டாரத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தார். ரஜினியின் 170வது படத்தை இயக்குவதாகவும் கூறப்பட்டது. 

kamal

இந்நிலையில் கமலின் ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷ்னல் தயாரிக்கும் புதிய படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் சிம்பு கதாநாயகனாக நடிக்கவுள்ளார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

kamal

இந்நிலையில் நடிகர் கமலஹாசனுக்கு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கற்பனைக்கு எட்டாத அற்புதங்கள் என் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளதற்கு நான் மிகவும் நன்றி உள்ளவனாக உணர்கிறேன். உலக நாயகனுக்கு கதை சொல்லும் பாக்கியம் கிடைத்தது. அதைவிட அவரின் தயாரிப்பில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. எனது கனவு நனவாகியுள்ளது. அற்புதங்கள் நிகழ்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார். 

 


 

Share this story