செப்டம்பரில் தொடங்கும் ‘எஸ்டிஆர் 51’ படப்பிடிப்பு...!

ashwath

செப்டம்பரில் ‘எஸ்.டி.ஆர் 51’ படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்துள்ளார்.

ராம்குமார் இயக்கத்தில் சிம்பு, சந்தானம், கயாடு லோஹர் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதனை தொடர்ந்து அவருடைய நடிப்பில் 50 மற்றும் 51-வது படம் எப்போது தொடங்கும் என்ற தகவல் தெரியாமல் இருந்தது.தற்போது தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கலந்து கொண்டார். அவரிடம் ‘எஸ்டிஆர் 51’ குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அர்ச்சனா “முதலில் அஸ்வத் மாரிமுத்து சிம்பு படத்தை இயக்குவதற்குதான் ஒப்பந்தமானார். ஆனால், சிம்பு தேதிகள் இல்லாத காரணத்தினால் அப்படம் தாமதமானது.simbu

இந்தக் கதையை ஏஜிஎஸ் தான் பண்ண வேண்டும் என்று அஸ்வத்திடம் கூறிவிட்டேன். சிம்பு ரசிகர்களுக்கு இப்படம் ஒரு விருந்தாக இருக்கும். இதன் நாயகி முடிவாகிவிட்டது. ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்புகள் வெளியாகி, செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறோம்” என்று அர்ச்சனா கல்பாத்தி பதிலளித்துள்ளார் . 

Share this story