STR49 படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என அறிவிப்பு...!

சிம்பு நடிக்கும் STR49 படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிலம்பரசன் தற்போது அவரது 49வது படமாக பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கிறார். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. அதனை அண்மையில் சந்தானம் உறுதி செய்திருந்தார்.
#STR49 - an update coming up at 6️⃣ PM 🧨🔥 pic.twitter.com/cULJfIVxVe
— DawnPictures (@DawnPicturesOff) April 30, 2025
மேலும் இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக டிராகன் படம் மூலம் புகழ்பெற்ற கயாடு லோஹர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், STR49 படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என டான் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.