ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது... அதிரடி காட்டிய போலீசார் !
மத போதரின் நடன வீடியோவை வெளிட்டதாக ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் கனல் கண்ணன். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், தொடர்ந்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு சென்னை மதுரவாயலில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய அவர், ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை இடிக்கவேண்டும் என்று பேசியிருந்தார்.
அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்சையான நிலையில் தந்தை பெரியார் திராவிடக் கழகம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே சமூக வலைத்தளத்தில் மத போதகரின் நடன வீடியோவை சமீபத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் ஜோசப் பெனடிக் என்பவர் நாகர்கோவில் சைபர் க்ரைம் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் கனல் கண்ணன் கிறிஸ்துவ மதத்தை அவமதித்தாக கூறியிருந்தார். இதன் அடிப்படையில் கனல் கண்ணனை அழைத்து இன்று விசாரித்த வந்த போலீசார், அவரை கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.