பிறந்தநாள் கொண்டாடிய அன்பறிவு சாகோதரர்கள்.. ஷங்கர் பட படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம் !
ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் அன்பறிவு சகோதரர்கள் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சண்டைப் பயிற்சி இயக்குனர்கள் கலக்கி வருபவர்கள் அன்பறிவ் சாகோதர்கள். அன்புமணி, அறிவுமணி என்ற இரட்டையர்களான இவர்கள் தமிழ் சினிமாவில் அன்பறிவ் என்று பாசமாக அழைத்து வருகின்றனர். தற்போதைய சினிமா உலகில் இருக்கும் பல முன்னணி ஹீரோக்களில் படங்களில் இவர்கள் பணிபுரிந்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘பீஸ்ட்’, விரைவில் வெளியாக உள்ள கமலின் விக்ரம் உள்ளிட்ட படங்களில் இவர்கள் பணியாற்றியுள்ளனர். இவர்களது நேர்த்தியான பணியை பார்த்து ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

தற்போது ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் பான் இந்தியா படத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பின் நடுவே இயக்குனர் ஷங்கருடன் இணைந்து அன்பறிவ் சாகோதரர்கள் பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

