‘சுப்ரமணியபுரம்’ படத்தின் புது வெர்ஷன் டிரைலர் இதோ!

photo

சுப்ரமணியபுரம் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். அந்த படத்தை இயக்கியது மட்டுமல்லால் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சசிகுமாருடன் இணைந்து ஜெய், சமுத்திரகனி, சுவாதி, கஞ்சா கருப்பு என பலர் நடித்திருந்தனர். மதுரையை பின்னணியாக கொண்டு அதிரடி ஆக்ஷன் படமாக உருவான இந்த படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் படம் வெளியாகி 15ஆண்டுகள் ஆனாலும் படத்தை கொண்டாடி வரும் ரசிகர்களுக்காக ரீ ரிலீஸ் செய்ய படக்குழு முடிவுசெய்து அதற்காக புது டிரைலர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

photo

அதன்படி, சுப்ரமணியபுரம் திரைப்படம் இம்மாதம் 4ஆம் தேதி திரையரங்குகளில் ரீ- ரிலீஸ்ஸாக உள்ளது.  வசனங்கள் எதுவும் இல்லாமல் தீம் மியூசிக்குடன் வெளியான இந்த புது வெர்ஷன் டிரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Share this story