ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்கில் திடீர் திருப்பம்..பிக் பாஸ் ப்ரோமோ...!

big boss

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 18 வது ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், இந்த வாரம் போட்டியாளர்களுக்கு ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கை சுவாரசியமாக விளையாடி, பார்வையாளர்களை போட்டியாளர்கள் கவர்ந்து வருகிறார்கள் என்பதும், இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும்.


ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் என்றாலும், ஆண்கள் அணி, பெண்கள் அணி என தனித்தனியாக விளையாடி வருகின்றனர் என்பதும் ஆண்கள் அணியினர் ஹோட்டலுக்கு வரும் விருந்தினர்களாகவும், பெண்கள் அணி ஸ்டார் ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்களாகவும் விளையாடி வருகின்றனர்.


இந்த நிலையில், தற்போது இந்த டாஸ்க்கில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்கில் சிறப்பாகவும் மோசமாகவும் விளையாடிய போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, இதில் சிறப்பாக விளையாடியவர்கள் ஒரு அணியும், மோசமாக விளையாடியவர்கள் ஒரு அணியும் விளையாடப் போகிறார்கள்.


இந்த இரண்டு அணியிலும் ஆண்கள், பெண்கள் கலந்து இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறப்பாக விளையாடியவர்கள் விருந்தினர்களாகவும், மோசமாக விளையாடியவர்கள் ஸ்டார் ஹோட்டல் ஊழியர்களாகவும் மாற இருப்பதால், அடுத்து வரும் இரண்டு நாட்கள் இந்த டாஸ்க்கில் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story