‘சினிமாவை விட்டு செல்ல நினைத்தேன்’ – மனம் திறந்த சுதா கொங்கரா.

photo

நாம் செய்யும் வேலை கடினமாகவோ, டார்ச்சராகவோ இருந்தால் அதை விட்டு சென்று விடலாம் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு வரும், ஆனால் அதை செய்யவிடாமல் எதோ ஒன்று நம்மை தக்கவைக்கும். அப்படியான ஒரு அனுபவத்தை தான் சுதாகொங்கரா தற்போது பகிர்ந்துள்ளார்.

photo

சமீபத்தில் சுதாகொங்கரா பேட்டி ஒன்றில் கூறியதாவது,’ எனது முதல்படம் துரோகி, அதற்கு முன்னர் மணிசாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். அந்த சமயத்தில் துரோகி படம் எடுப்பது எனக்கு டார்ச்சராக இருந்தது. பேசாமல் சினிமாவை விட்டே போய்விடலாம் என நினைத்தேன். அப்போது தான் மணி சாருக்கு அதை சொல்லி மேசேஜ் அனுப்பினேன். எப்போது மேசேஜ் அனுப்பினால் லேட்டாக தான் பதில்வரும் ஆனால் அன்று

photo

உடனடியாக 4 பக்கத்திற்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். என்னவானாலும் சரி இந்த துரோகி படத்தை முடித்துவிட்டு தான் வர வேண்டும் என கூறியிருந்தார். அதனால் அந்த படத்தை கஷ்டப்பட்டு எடுத்தேன் இருந்தும் பெரிய தோல்வியை சந்தித்தது அந்த படம். இதுகுறித்து நான் மணிரத்தினம் சாரிடம் பேசும் போது, அவர் நீ 3 படம் எடுத்து தோல்வியை சந்தித்த இயக்குனரிடம் பேசி கொண்டிருக்கிறாய் என்பதை நினைவில்கொள் என்றார்.  அடுத்ததாக நான் எடுத்த படம் தான் ‘இறுதிசுற்றுஇதை உன்னால் எடுக்கவே முடியாது என பலர் சொன்னார்கள். அப்போதும் நான் மணி சாரிடம் சென்று கூறினேன், அவர்நீ உன் வேலையில் மூலம் இதை வெற்றிகரமாக எடுத்து காட்டு என கூறினார்’ இப்படியாக தனது அனுபத்தை பகிர்ந்துள்ளார் சுதா.  

Share this story