முன்னணி பாடகர்களின் குரலில் உருவாகியுள்ள ‘சுதந்திர தேசமே - வந்தே மாதரம்’... வீடியோ பாடல் வெளியானது !
பிரபல பாடலாசிரியர் திருமாறன் எழுதிய ‘சுதந்திர தேமே - வந்தே மாதரம்’ என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராகவும், பாடலாசிரியராகவும் இருப்பவர் திருமாறன். கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான ‘காலம் மாறிப்போச்சு’ படத்தின் மூலம் உதவி இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு ‘கோல்மால்’ படத்தின் மூலம் பாடலாசிரியராக கவனம் பெற்றார்.
பன்முக திறமை கொண்ட அவர், உதவி இயக்குனராகவும், பாடலாசிரியராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய பாடல் ஒன்றை திருமாறன் எழுதியுள்ளார். 77வது சுதந்திர தினத்தையொட்டி சுதந்திர தேசமே - வந்தே மாதரம் பாடல் என தொடங்கும் அந்த பாடல் ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் யூடியூப் சேனலில் இன்று வெளியிடப்பட்டது.
இந்த பாடலை சின்னக்குயில் சித்ரா, சங்கர் மகாதேவன், ஜீவி பிரகாஷ்குமார், அந்தோணிதாசன், கேசவ் ராம், ரீத்தா அந்தோணிதாசன், ஹஷ்வந்த், மீனாட்சி இளையராஜா, குட்டிப்பாப்பா ரௌடிபேபி வர்ஷினி ஆகியோர் பாடியுள்ளனர். தேசப்பற்றை போற்று அந்த பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது.