இணையத்தில் கசிந்த ‘சூர்யா42’ படத்தின் டைட்டில்!

photo

சூர்யா தனது 42 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். யுவி கிரியேஷன்ஸ் மற்றும்  ஸ்டுடியோ கிரீன் தயாரிக்க்கும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். சூர்யா- திஷாபதானி நடிக்கும் இந்த படத்தில் அவர்களுடன் இணைந்து  யோகிபாபு, கோவைசரளா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக தயாரகும் இந்த படத்தில் சூர்யா 10ற்கும் மேற்பட்ட கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்.  ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகிறதுஇந்த நிலையில் படத்தின் டைட்டில் வீடியோ இன்று காலை 9.05 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் தலைப்பு இணையத்தில் கசிந்துள்ளது. 

photo

 சூர்யா 42 படத்தின் டைட்டில் 'கங்குவா' என தெரியவந்துள்ளது  கங்குவா டைட்டில் டீசரின் ரன்டைம் 1 நிமிடம் 16 வினாடிகள் என்ற சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது. உடனடியாக இணையத்தில் இதற்கு அர்த்தம் என்ன என தேட தொடங்கினர் ரசிகர்கள். அதன் படி இது ஒரு மராத்திய குடும்ப பெயர் எனறும், ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தலித் ஆதிக்க கிராமத்தின் பெயரும் கூட என தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

photo

Share this story